நகைக்கடைக்காரர் மகளுடன் அனிருத் திருமணம் உண்மையா?

  • IndiaGlitz, [Friday,March 31 2017]

கடந்த சில நாட்களாக இணையதளங்களில் இளம் இசைப்புயல் அனிருத் திருமணம் குறித்த செய்திகள் மிக வேகமாக பரவி வருகிறது. அனிருத் நகைக்கடை உரிமையாளர் ஒருவரது மகளை திருமணம் செய்யவிருப்பதாகவும், வரதட்சணையாக நவீன ரிகார்டிங் ஸ்டுடியோ ஒன்றை அவர் அனிருத்துக்கு கொடுக்கவிருப்பதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன.


இந்நிலையில் இதுகுறித்து அனிருத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியபோது, 'இது முழுக்க முழுக்க வதந்தி. தவறான செய்தி. அனிருத் இப்போதைக்கு திருமணம் செய்யும் ஐடியாவில் இல்லை. எந்த நகைக்கடைக்காரர் உரிமையாளர் பெண்ணையும் அனிருத்துக்கு பேசி முடிக்கவில்லை' என்று கூறினர்.

இதுகுறித்து அனிருத் கூறியபோது, 'நான் ஒவ்வொரு நாளும் இரவில் ரிகார்டிங் பணிகளை முடித்துவிட்டு மதியம் தான் தூங்கி எழுவேன். நான் தூங்கி எழுந்ததும் என்னை பற்றிய ஏதாவது ஒரு வதந்தி பரவி வருகிறது. இதுபோன்ற வதந்திகளை ஏன் பரப்புகின்றனர் என்பதே தெரியவில்லை. இதுபோன்ற வதந்திகளை பரப்புபவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார்.

More News

விஜய்சேதுபதியின் 'கவண்' படத்திற்கு கிடைத்த கூடுதல் போனஸ்

விஜய்சேதுபதி நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கவண்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் இன்றைய ஓப்பனிங் வசூல் பிரமாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

40 வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்த ரஜினி-லதா

கடந்த 70களில் எம்.ஜி.ஆர், சிவாஜி நடித்த படங்களில் நடித்து பிரபலமாக இருந்த நடிகை லதா.

ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு மீண்டும் ஒரு ரஜினி டைட்டில்

நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே ரஜினியின் சூப்பர் ஹிட் வசனமான 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என்ற டைட்டிலில் ஒரு படம் நடித்து அப்படம் சமீபத்தில் வெளிவந்தது.

திருப்பதி அருகே பாலாஜி கோவிலில் அர்ச்சனை செய்யும் இஸ்லாமியர்கள்

உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து 120 கிமீ தூரத்தில் உள்ள கடப்பா பகுதியில் உள்ள பாலாஜி கோவில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துகாட்டாக விளங்கி வருகிறது.

ஒரே ஒரு தாடியை தோற்கடிக்க இத்தனை கோடியா? டி.ராஜேந்தர் கேள்வி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் நாள் நெருங்க நெருங்க வேட்பாளர்களுக்கு இடையே இணைப்புகள், பதுங்குதல், பாய்தல் ஆகியவை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.